ஜூன் 14, ஓசூர் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னஎலசகிரியில், அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அங்குள்ள ஏரியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் குழாய் வழியாக குடிநீர் (Corporation Water) வழங்கப்பட்டு வருகின்றது. Elon Musk Says Can Build Optimus Robots: ஓராண்டுக்கு 100 மில்லியன் ஆப்டிமஸ் ரோபோக்களை உருவாக்க முடியும்; எலோன் மஸ்க் பெருமிதம்..!
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் வழங்கபட்ட குடிநீரை குடித்த 15-க்கும் ஏற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு வாந்தி (Vomit), மயக்கம் ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அங்கு சென்ற ஓசூர் சார் ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், மேயர் ஆகியோர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இதுதொடர்பாக, மாநகர நல அலுவலர் தலைமையில், மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு சென்று, முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள். மேலும், குடிநீரை பரிசோதனை செய்து வருகின்றனர்.