டிசம்பர் 18, திருநெல்வேலி (Tirunelveli): நேற்று பெய்த அதீத கனமழை தென் மாவட்டங்களை நிலை குலையச் செய்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழை இன்னும் பெய்து வருகிறது. ஏறத்தாழ அனைத்து இடங்களும் நீரால் சூழப்பட்டுள்ளது. அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
துண்டிக்கப்பட்ட சாலைகளின் விபரம்: பெருவெள்ளத்தால் நெல்லையை மையமாகக் கொண்டு இருக்கும் சில சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர் மழையால் திசையன்விளை - திருநெல்வேலி , நெல்லை - திருச்செந்தூர், நெல்லை - தூத்துக்குடி, நெல்லை - கோவில்பட்டி , பேட்டை - பழைய பேட்டை இணைப்பு சாலை, நெல்லை டவுண் - சேரன்மகாதேவி, முக்கூடல் - கடையம், இடைகால் - ஆலங்குளம், அம்பை - கல்லிடை - வெள்ளங்குளி, நெல்லை புது பஸ்டாண்ட் - அம்பை ரோடு முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. Women Gang Raped: 5 பேர் கும்பலால் இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்., லிப்ட் கொடுப்பதாக நடித்து நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.!
இடிந்து விழும் வீடுகள்: இந்நிலையில், நெல்லை சந்திப்பு பகுதியில் கான்கிரீட் வீடு ஒன்று வெள்ளத்தில் இடிந்து விழுந்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடு இடிந்து விழும் பொது, அதன் உரிமையாளர் எல்லாம் போச்சே என்று கதறி அழுகும் வீடியோ பார்ப்பதற்கே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. இந்த பகுதியில், சுமார் 5-6 அடி வரை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்டு வருகின்றனர்.
சோகத்தின் உச்சத்தில், வேதனை குரல்: எல்லாம் போச்சே...
நெல்லை சந்திப்பு பகுதியில் கான்கிரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் எல்லாம் போச்சே என அந்த குடும்பத்தினர் கதறி அழுத பரிதாபக் காட்சி....#SouthTNFloods #SouthTNRains #RedAlert pic.twitter.com/C7vmeXRC6Z
— Backiya (@backiya28) December 18, 2023