Tomorrow weather (Photo Credit: LatestLY)

டிசம்பர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தவரையில், தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடானா அணையில் 26 சென்டிமீட்டர் மழையும், நெல்லை ஊத்து பகுதியில் 23 சென்டிமீட்டர் மழையும், நெல்லை நாலுமுக்கு பகுதியில 22 சென்டிமீட்டர் மழையும், தூத்துக்குடி விமான நிலைய பகுதியில் 20 சென்டிமீட்டர் மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது. இவை தவிர்த்து திருநெல்வேலி மாவட்டத்தின் பரவலான பகுதிகள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், விருதுநகர், தூத்துக்குடி, தேனி, மதுரை, அரியலூர், திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி:

நாளை வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும். இதனால் மிககனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கரையை நெருங்கும் நேரத்தில் மேலும் இது வலுவடையும், காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன் நகர்வுகள் தொடர்ந்து வானிலை ஆய்வு மையத்தால் கவனிக்கப்படுகிறது. TVK Vijay: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு., தவெக தலைவர் விஜய் வேதனை.. இரங்கல்.!

இன்றைய வானிலை (Today Weather):

இன்று தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற தமிழக பகுதிகளில் லேசான/மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. 15ம் தேதி நாளை, தமிழ்நாடு முழுவதும் பரவலாக லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

டிச.16 அன்று டெல்டா மாவட்டங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அம்மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. டிச. 17 அன்று செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக கனமழை முதல் மிககனமழையும் பெய்யும். அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று லட்சத்தீவு, மாலத்தீவு, தெற்கு கேரளா கடலோரப்பகுதி, அந்தமான் கடலோரப்பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கிமீ வேகம் முதல் 45 கிமீ வேகம் வரையிலும், இடையிடையே 55 கிமீ வேகம் வரையிலும் இருக்கும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.