Tenkasi Rains | Kutralam Falls Flood (Photo Credit: @TenkasiWeather X)

டிசம்பர் 13, குற்றாலம் (Tenkasi News): வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நேற்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்யும் வகையில், பல மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. ஒருசில மாவட்டங்களில் நேற்று பகலில் தொடங்கிய மழை விடிய-விடிய விட்டுவிட்டு கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. Dindigul Hospital Fire Accident: தமிழகமே அதிர்ந்தது.. மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து; 7 பேர் பரிதாப பலி.. திண்டுக்கல்லில் சோகம்.!

தென்காசி (Tenkasi Weather) மாவட்டத்தில் மழை நிலவரம்:

குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி (Tirunelveli Rains) மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மீதும் பெய்த மழையால், அங்குள்ள முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஓடுகிறது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தமட்டில், கடந்த 24 மணிநேரத்தில் ஆய்குடியில் 31 செமீ மழை பதிவாகியுள்ளது. தென்காசியில் 23 செமீ மழை, ராமநதி அணையில் 23 செமீ மழை, செங்கோட்டையில் 24 செமீ மழை, குண்டாறு அணையில் 20 செமீ மழை பெய்துள்ளது.

குற்றாலம் (Kutralam Falls Flood) அருவிகளில் பல ஆண்டுகளுக்கு பின் கடும் வெள்ளப்பெருக்கு:

குற்றாலம் (Courtallam) அருவிகளுக்கு நீர்வரத்தை வழங்கும் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, குற்றாலம், பழைய அருவி, ஐந்தருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குற்றாலம் மெயின் அருவியில், பல ஆண்டுகளுக்கு பின்னர் இணைப்பு பாலத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் குற்றாலம் மற்றும் அதன் சரக அருவிகளில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, பலரும் குற்றாலம் வரலாம் என என திட்டமிட்டு இருந்த நிலையில், அவர்கள் தங்களின் பயணத்தை மாற்றிய அமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் - கொல்லம் (Kollam National Highway, Shengottai) தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு:

குறிப்பாக ஐயப்பன், முருகன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்வோர், குற்றாலத்திற்கு வந்து செல்வார்கள். அவ்வாறாக வரும் பக்தர்கள், குற்றாலத்தில் குளிக்க அனுமதி இல்லாத காரணத்தாலும், வெள்ளப்பெருக்கின் அபாயம் காரணமாகவும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், செங்கோட்டை பத்துக்குளம் கண்மாய் உடைப்பு காரணமாக, தென்காசி - கொல்லம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குற்றாலம் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு:

குழந்தைப்பருவத்திற்கு பின்னர் வீட்டின் முன் மழையால் வெள்ளம்போவதாக பயனர் பதிவு:

பழைய அருவியில் வெள்ளப்பெருக்கு: