Tamilnadu Rains (Photo Credit : @PTI_News X)

அக்டோபர் 21, சென்னை (Chennai News): தமிழகத்துக்கு அதிக மழைபொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் அறிகுறிகளாக வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை மதியம் வலுப்பெறும். தற்போதைய நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

இன்று காலை 05:30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, 08:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில், மேலும் மேற்கு-வடமேற்கு திசையில், வடதமிழக புதுவை தெற்கு ஆந்திர கடலாரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக்கூடும். Gold Silver Rate: ஹேப்பி நியூஸ்.. சவரனுக்கு ரூ.1,440 குறைந்த தங்கம்.. வெள்ளி விலையும் சரிவு.!

இன்றைய வானிலை (Today Weather):

இதனால் இன்று இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளைய வானிலை (Tomorrow Weather):

நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம். திருச்சிராப்பள்ளி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

தயார் நிலையில் மீட்பு படையினர்:

தமிழகத்தில் வடகிழக்க பருவமழை தீவிரமாகியுள்ளதை தொடர்ந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகளை விரைந்து மாவட்டங்களுக்கு செல்ல தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு மீட்பு படையினரை தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு:

  • திருவள்ளூர் மாவட்டம்: 044 27664177, 044 27666746 & 94443 17862
  • காஞ்சிபுரம் மாவட்டம்: 044 27237107, 80562 21077
  • கடலூர் மாவட்டம்: 1077, 04142 220700
  • திருவாரூர் மாவட்டம்: 04366 1077, 04366 226623 வாட்ஸ்அப்: 90439 89192, 93456 40279
  • புதுக்கோட்டை மாவட்டம்: 1077, 04322 222207
  • தஞ்சாவூர் மாவட்டம்: 1077, 04362 230456
  • கள்ளக்குறிச்சி மாவட்டம்: 1077, 04151 228801 வாட்ஸ்அப்: 94450 05243

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதல்வர் ஆய்வு: