மே 10, chennai (Chennai): கடந்த மே 06ம் தேதி தமிழ்நாடு மாநில பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 12ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான (TN 10th Exam Result) அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து, அம்மாணவர்கள் அனைவரும் தங்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை தொடங்கி இருக்கின்றனர். பல கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு கல்லூரிகளில் சேருவோருக்கான விண்ணப்ப படிவம் வழங்குதலும் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன. மொத்தமாக 7 இலட்சத்திற்கும் அதிகமானோர் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தேர்ச்சி அடைந்து இருந்தனர். Earthquake In India: கார்கில் பகுதியில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
இன்று வெளியாகிறது தேர்வு முடிவுகள்: இந்நிலையில், மே 10ம் தேதியான இன்று தமிழ்நாடு மாநில பள்ளித்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.இன்று காலை 09:30 மணியளவில் தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநராகத்தால் தேர்வு முடிவய்கள் வெளியிடப்படுகின்றன. மாணவர்களின் தங்களின் தேர்வுகளை https://tnresults.nic.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். அதேபோல, மாணவர்கள் தேர்வு நுழைவுதலில் குறிப்பிடப்பட்ட அலைபேசி எண்ணுக்கு அதன் முடிவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை அறிவது எப்படி?
- அரசின் https://tnresults.nic.in/ என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
- அங்கு 10 ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகளை கண்டறிய வேண்டும்.
- பின் அதனுள் மாணவர் தனது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவிட்டால் மதிப்பெண் பெறப்படும்.
- இந்த மதிப்பெண் பட்டியலை நீங்கள் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். தேவைப்படுவோர் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்வது நல்லது.
கடந்த மார்ச் மாதம் 26 முதல் ஏப்ரல் மாதம் 08 ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.