டிசம்பர் 22, திட்டக்குடி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (Tittagudi), ராமநத்தம், வெங்கனூர் ஓடைப்பாலம் பகுதியில், இன்று தனியார் பேருந்து விபத்தில் (Omni Bus Accident) சிக்கியது. சென்னையில் இருந்து நாகர்கோவில் (Chennai to Nagarcoil) நோக்கி தனியார் பேருந்து ஒன்று பயணித்த நிலையில், வெங்கனூரில் அப்பேருந்து விபத்தில் சிக்கியது. சுமார் 54 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
பேருந்து கவிழ்ந்து விபத்து:
பேருந்து ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் இருந்த நிலையில், வெங்கனூர் ஓடைப்பாலத்தில் வாகனம் சாலைத்தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து இருக்கிறது. பேருந்து விபத்திற்குள்ளானபோது, பேருந்துக்கு பின்னாலேயே வந்த லாரியும், பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது.
மீட்புப்பணிகள் தீவிரம்:
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் படுகாயமடைந்து, நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும், பிற பயணிகள் அனைவரும் காயமடைந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். "உண்டியலில் விழுந்தது முருகனுக்கு சொந்தம்" - உண்டியலில் தவறி விழுந்த ரூ.1 இலட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட்போன்.. அதிகாரிகள் விளக்கம்.!
போக்குவரத்து பாதிப்பு:
காயமடைந்தவர்கள் பெரம்பலூர், வேப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். விபத்து எப்படி நேர்ந்தது? உயிரிழந்தவர் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
அலட்சியமே காரணம்?
முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய பேருந்தை ஒட்டிய ஓட்டுநர், உறக்க கலக்கத்தில் இருந்ததாகவும், அதிவேகத்தில் பேருந்து பயணம் செய்ததே விபத்திற்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை தொடருகிறது..