ஏப்ரல் 30, கோவை (Coimbatore News): கோவை காந்திபுரம் 7வது வீதியில் வசித்து வருபவர் வழக்கறிஞர் மீனாட்சி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று நள்ளிரவில் மூவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் காலை எழுந்து பார்த்தபோது மீனாட்சியின் செல்போன்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து மீனாட்சியின் தொடர்பு எண்களுக்கு அவரது மகன்கள் அழைத்த போது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்படாமல் இருப்பதும் தெரிய வந்தது. Chhattisgarh Encounter: 2 பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகளை சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் பரபரப்பு..!
தொடர்ந்து, அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் சட்டையால் முகத்தை மறைத்தபடி மர்ம நபர் ஒருவர் (CCTV footage of a mysterious man), காம்பவுண்ட் சுவரில் குதித்து வீட்டின் உள்ளே புகுந்து 2 போன்களை மட்டும் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்ற காட்சிகள் பதிவாக இருந்தன. இந்த சிசிடிவி காட்சி ஆவணங்களுடன் மீனாட்சி சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல் துறையினர் திருடி சென்ற மர்ம நபரை (Thief) தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் நள்ளிரவு நேரத்தில் சட்டையால் முகத்தை மறைத்தபடி வீட்டில் புகுந்த மர்ம நபர் 2 செல்போன்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TamilNews pic.twitter.com/jo5Jc0zEbt
— Backiya (@backiya28) April 30, 2024