ஜூன் 25, ஜம்மு காஷ்மீர் (Jammu and Kashmir News): ஜம்மு காஷ்மீரில் உள்ள பஷீர் நகரை சேர்ந்தவரிடம் இளைஞர் ஒருவர் ரூ.40,000 பணத்தை திருடியுள்ளார். இதனால் மக்கள் அவர் மீது தாக்குதல் நடத்தவே, ஆத்திரமடைந்தவர் தான் வைத்திருந்த கத்தியால் பொதுமக்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மடக்கி பிடித்து அவரது சட்டையால் கைகளைக் கட்டி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகவே, நெட்டிசன்கள் பலரும் போலீசார் இது போன்ற மனிதாபமில்லாத செயலில் ஈடுபட்டதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்ட போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், விரைவில் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காதலனை தூண்டி தாயை கொலை செய்த 15 வயது மகள்.. துடிதுடித்து பறிபோன உயிர்.! 

போலீசார் இளைஞரை செருப்பு மாலை அணிவித்து அழைத்து சென்றது குறித்த வீடியோ :