
ஜூன் 17, பண்ருட்டி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, திராசு கிராமத்தில் வசித்து வருபவர் கௌசல்யா (வயது 80). மூதாட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அங்குள்ள புலவனூர் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்போது சாலையோரம் மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் மூதாட்டியை சவுக்கு தோப்புக்குள் இழுத்துச் சென்று இருக்கின்றனர்.
வாயில் மண்ணை கொட்டி பலாத்காரம் :
மேலும் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணைக் கொட்டி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. மூதாட்டி அணிந்திருந்த ஒரு சவரன் நகையையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி இருக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்தனர். வானிலை: கோவை, நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்.. இன்றைய வானிலை அறிவிப்பு இதோ.!
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை :
தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய இளைஞர்களுக்கும் வலை வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
மூதாட்டி வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம் :
இந்நிலையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கொடூரத்தை அரங்கேற்றியது ஒருவர் தான் என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து குற்றவாளி சுட்டுப்பிடிக்கப்பட்டார். மதுபோதையில் சுந்தரவேல் என்ற காமுகன் மூதாட்டியை வன்கொடுமை (Rape) செய்துள்ளார். இவர் மீது ஈரோடு காவல்நிலையத்தில் கொள்ளை வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.