மே 05, உசிலம்பட்டி (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி (Usilampatti Mother Killed Son), தும்மக்குண்டு பகுதியை சேர்ந்தவர் சிவசாமி. இவருக்கு திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்து பிரிந்துள்ளார். பின் தனது தும்மக்குண்டு கிராமத்திலேயே தாயார் பாண்டீஸ்வரியுடன் வசித்து வந்துள்ளார். மதுபோதைக்கு அடிமையான சிவசாமி, எப்போதும் போதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் பாண்டீஸ்வரி மகனுடன் நிம்மதியில்லாத வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். 12th Exam Results: இன்று வெளியாகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; மதிப்பெண்ணை அறிந்துகொள்வது எப்படி?.!
பொறுமையின் சிகரம் ஆத்திரத்தில் காளியாக மாறியதால் நடந்த சோகம்: இதனிடையே, சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டிற்கு வந்த சிவசாமி, தாயிடம் தகராறு செய்து வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார், தாயையும் தாக்கி இருக்கிறார். இது பாண்டீஸ்வரியை ஆத்திரத்தின் உச்சத்திற்கு கொண்டுசெல்ல, மகனை கட்டை, கற்கள் என கையில் கிடைத்த பொருட்களால் கடுமையாக தாக்கி இருக்கிறார் இந்த சம்பவத்தில் நிலைகுலைந்த சிவசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், சிவசமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குபதிவு செய்து பாண்டீஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்: மதுவினால் ஏற்படும் துயரங்கள் ஒவ்வொரு இடத்திலும் தொடருகிறது. அதனை அருந்துவோருக்கு மது உடலளவில் பிரச்சனையை காலம் கடந்து கொடுத்தாலும், அதனால் வரும் விளைவுகளை குடிகாரர்களுடன் தாய், தந்தை, மகன், மனைவி என பாசபந்தத்தில் இருக்கும் நபர்களுக்கு பெரும் ஆபத்தாய் அமைந்து, அவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.