Kidney (Photo Credit :Freepik)

ஜூலை 19, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை மக்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடைபெறுவதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்ததால், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது, இடைத்தரகர் ஆனந்தன் என்பவருக்கு இவ்விவகாரத்தில் முகாந்திரம் இருப்பது உறுதியானது‌. இதனால் ஆனந்தன் மீது பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கிட்னி திருட்டு விசாரணை:

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் ரகசிய விசாரணை நடத்தினர். அவரும் தனது வாக்குமூலத்தை பதிவு செய்த நிலையில், இவர் கொடுத்த தகவலின் பெயரில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக தமிழ்நாடு சுகாதார திட்ட தலைமை இயக்குனர் சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா‌. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி, விசாரணை தொடங்கியுள்ளது.

போலி ஆவணங்கள்:

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை ஆறு பேரின் கிட்னி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர்களின் உறவினர்கள் என போலியான முகவரி மற்றும் சான்றுகள் கொடுத்து மோசடி அரங்கேற்றப்பட்டுள்ள து. இந்த கும்பலுக்கு பின்னணியில் இருப்பது யார்? என விசாரணை நடந்துவரும் நிலையில், இதில் பல புள்ளிகளும் சிக்கலால் என எதிர்பார்க்கப்படுகிறது.