ஜூலை 15, சேலம் (Salem News): தூத்துக்குடியை சேர்ந்தவர் மதன் என்கிற அப்பு (வயது 28). இவரின் மீது காவல்நிலையத்தில் ஏற்கனவே கொலை வழக்குப்பதிவாகி சிறைக்கு சென்றுள்ளார். சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அப்பு, சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 10 நாட்களாக கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல் :
இந்நிலையில் இன்று காலை மனைவியுடன் வந்தவர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின் அங்கிருந்து 300 அடி தொலைவில் உள்ள தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் ஹோட்டலுக்குள் புகுந்து அப்புவை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்வு இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர்: சிக்கனால் பஞ்சாயத்து.. காதல் திருமணம் செய்த ஒரே மாதத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை.!
போலீசார் விசாரணை :
கொலை சம்பவத்துக்கு பின் தகவலறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் அப்புவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடையவர் 3 பேர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது பழிக்கு பலியான கொலையா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.