செப்டம்பர் 30, நீடாமங்கலம் (Thiruvarur News): திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் (Needamangalam), சோணாப்பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர் சிவாஜி (வயது 55). இவரது மனைவி இந்துமதி (வயது 45). தம்பதிகளுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், ஒரு மகளுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்தவர் காந்தி. இவரிடம் இந்துமதி ரூபாய் 9 லட்சம் அளவில் கடன் வாங்கி இருந்த நிலையில், கந்துவட்டி வாங்கி இந்துமதி ரூபாய் 20 லட்சம் வட்டியும் அசலும் கொடுத்து கடனை அடைந்துள்ளார். Coonoor Landslides: தொடர் மழையால் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி ஆசிரியை மரணம்; உயிர்தப்பிய கணவர், மகள்கள்.! நீலகிரியில் சோகம்.!
கந்துவட்டி அடாவடி:
வட்டி மற்றும் அசல் பணத்தை பெற்றுக் கொண்ட காந்தி, அதற்கான ஒப்புகை சீட்டை கொடுக்கவில்லை என தெரியவருகிறது. அதனைக்கேட்டபோது, இது தொடர்பாக இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் சிவாஜி வீட்டிற்கு வருகை தந்த காந்தி, டிராக்டரில் சென்று பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இதனால் அங்கு தகராறு உண்டாகவே, ஆத்திரமடைந்த காந்தி சிவாஜியின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மருமகனின் காரை டிராக்டரால் மோதி இருக்கிறார்.
பெண்ணின் உயிர் பறிபோனது:
இந்த விஷயத்தை நேரில் பார்த்த இந்துமதி தட்டிக்கேட்ட நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்திருந்த இந்துமதியை டிராக்டர் கொண்டு மோதிய காந்தி தப்பிச்சென்றார். இச்சம்பவத்தில் இந்துமதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து வந்த நீடாமங்கலம் காவல்துறையினர், இந்துமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தலைமறைவான காந்தியையும் தேடி வருகின்றனர்.