மார்ச் 29, ஏரல் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல், புதுமனை தெருவில் வசித்து வருபவர் ஜார்ஜ் ராஜா. இவரின் மகன் உதயகுமார் (வயது 42). இவர் ஏரல் சந்தைக்கு அருகே செல்போன் கடை வைத்து நடத்துகிறார். உதயகுமாருக்கும் - அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் பின்னாளில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

கள்ளக்காதல் வயப்பட்ட இளம்பெண்: திருமணம் முடிந்த இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இளம்பெண்ணுடன் நெருங்கி பழகிய உதயகுமார் பல நேரங்களில் அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கள்ளக்காதல் ஜோடி காணொளியாக பதிவு செய்து வைத்ததாகவும் தெரியவருகிறது. வீட்டில் இருக்கும்போது காதல் ஜோடி வீடியோ காலில் கவர்ச்சி காட்சிகளுடன் உரையாடி வந்துள்ளது என கூறப்படுகிறது. Best Budget Smartphones Under Rs.20,000: பட்ஜெட் தொகையில் ரூ.20,000/- க்கும் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்; அசத்தல் லிஸ்ட் இதோ.! 

விசாரணையில் அதிர்ச்சி தகவல்: இந்நிலையில், சம்பவத்தன்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட பெண்ணின் 3 வயது பச்சிளம் குழந்தை மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பான அந்தரங்க வீடியோ வெளியானது. இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர் உதயகுமார் கைது செய்யப்பட்டார்.

கண்ணைமறைத்த காம ஆசையால் பகீர்: சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "கள்ளக்காதல் வயப்பட்ட இளம்பெண் தனது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரை ஆபாசமாக படம்பிடித்து அனுப்பியுள்ளார். கள்ளக்காதலி அனுப்பிய விடீயோவை பார்த்து இன்பம் கண்ட உதயகுமார், இறுதியில் அதனை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்" என்பது உறுதியானது. உண்மையை அறிந்த அதிகாரிகள் உதயகுமார் மற்றும் அவரின் கள்ளகாதலியான இளம்பெண் மீது போக்ஸோ உட்பட பல்வேறு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரும் தகவல் அறிந்து தாயகம் வந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.