ஜூலை 24, மண்ணச்சநல்லூர் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் (Manachanallur), கிழக்கு காமராஜர் காலனியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவர் அரிசி ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கீர்த்திகா (வயது 32). தம்பதிகளுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. அன்புடன் வாழ்ந்து வந்த இவர்களுக்கு கோகுல்நாத் என்ற 14 வயது மகனும், சாய் நந்தினி என்ற 11 வயது மகளும் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கோகுல்நாத் மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார், சாய் நந்தினி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். 25-Year-Old Pregnant Woman Died: கருக்கலைப்பில் உயிரிழந்த 25 வயது இளம்பெண்; கள்ளக்காதலியின் குழந்தைகளை கொன்ற கள்ளக்காதலன்; நெஞ்சை நடுங்கவைக்கும் துயரம்.!
கடன் தொல்லையால் துயரம்:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதிகள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இருவருக்கும் கடன் பிரச்சனை என்பது இருந்துள்ளது. இதனால் வேலை பார்க்கும் பணத்தை கொண்டு சிறுகச்சிறுக கடனை அடைத்து வந்துள்ளனர். ஆனால், பல ஆண்டுகளாக கடன் தொல்லை இவர்களின் கழுத்தை நெரித்து இருக்கிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் கிருஷ்ணமூர்த்தி அரிசி ஆலைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
குடும்பத்தலைவர் கண்ட அதிர்ச்சி காட்சி:
பின் மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்தபோது தனது மனைவி கீர்த்திகா, மகன் கோகுல்நாத், மகள் சாய் நந்தினி என மூவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மண்ணச்சநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்து நிகழ்விடம் விரைந்த காவல்துறையினர், மூவரின் உடலையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினர் கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு விபரீத முடிவை தேடிக்கொண்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.