Hanging Suicide (Photo Credit: Pixabay)

ஜூலை 07, எரிகுத்திமேடு (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள எரிகுத்திமேடு பகுதியில் வசித்து வருபவர் அன்சர் (52). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். அன்சரின் மனைவி மும்தாஜ் (48). தம்பதிகளுக்கு நஸ்ரின், ஷாபிகா என இரண்டு மகள்களும், இம்ரான் (28) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவர்க்கும் திருமணம் முடிந்து, தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதே பகுதியில் இம்ரான் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

ரூ.30 இலட்சம் கடன்:

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இம்ரானுக்கு திருமணம் நடந்து avar தற்போது தனது மனைவி அர்ஷியாமா, ஒரு வயது ஆண் குழந்தை அப்பானுடன் வசித்து வருகிறார். அர்ஷியமா தற்போது மீண்டும் 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார். இதனிடையே, அன்சர் - மும்தாஜ் ஜோடியாக குடியாத்தம், ஆம்பூர் உட்பட பல்வேறு பகுதியில் மைக்ரோ பைனான்ஸ், மகளிர் குழு, நிதி நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக ரூ.30 இலட்சம் அளவில் கடன் வாங்கி இருக்கின்றனர். கடனை அடைக்க, கடனுக்கு வட்டிக்கட்ட என மேலும் கடன் வாங்கி இருக்கின்றனர். MS Dhoni Birthday Celebration: கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சாக்ஷி தோனி; தல தோனிக்கு குவியும் வாழ்த்துக்கள்.! 

கடனை கேட்டு மிரட்டல்:

இதனால் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிய தமப்தி, அதனை செலுத்த இயலாமல் திணறி இருக்கிறது. இந்நிலையில், நேற்று மும்தாஜ், இம்ரான் ஆகியோர் இம்ரானின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து பேரணாம்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், தனியார் நிதிநிறுவன ஊழியர், அன்சாரின் வீட்டிற்கு சென்று கடனை கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

வீடியோ பதிவு செய்து சோகம்:

இம்ரானின் மனைவி அர்ஷிமயா மருத்துவ பரிசோதனைக்காக அவரின் தந்தை குலாப்புடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்கள் வருவதற்குள் இந்த சோகம் நடந்து முடிந்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முன்னதாக இம்ரான் மற்றும் அவரின் தாய் மும்தாஜ் ஆகியோர் கதறியபடி வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வைத்து வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த காணொளியில், தனது தந்தை அன்சர் பல இடங்களில் கடன்கள் வாங்கி இருக்கிறார். இதனை செலுத்த முடியவில்லை. பெட்ரோல் வாங்கிவிட்டு வருவதாக சென்ற அவரும் திரும்ப வரவில்லை. பணம் கொடுத்தவர்கள் பணத்தை கேட்கிறார்கள். எங்களால் இதற்குமேல் முடியாது. நாங்கள் எங்கள் முடிவை தேடிக்கொள்கிறோம் என அதில் பேசப்பட்டுள்ளது. இதனை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்த தாய்-மகன் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர்.