ஜூன் 10, நியூயார்க் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் (IND Vs PAK) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களிலேயே 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. Perambalur Shocker: ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்த இளைஞர் பரிதாப பலி; சாகப்போவதாக கத்திக்கொண்டு துயரம்..!
இந்த ஆட்டத்தில், அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்களை அடிக்க தடுமாறியபோது, இந்திய அணியில் தனி ஒரு வீரராக போராடியவர் தான் மரணத்தை வென்ற ரிஷப் பண்ட். தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியபோது, இவர் மட்டும் தனியாக அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, பண்ட் மட்டும் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 6 பவுண்டரிகளை அடித்து, 42 ரன்களை குவித்தார். இதன்மூலம் இந்திய அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
தனது பேட்டிங்கில் அசத்தியவர், விக்கெட் கீப்பிங்கிலும் 3 கேட்ச்களை பிடித்து அசத்தினார். மேலும், அக்சர் பந்தில் எடுத்த எல்பிடபிள்யூ ரிவீவ் மற்றும் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் பந்தில் எடுத்த கேட்ச் ரிவீவ் என இரண்டையும் சிறப்பாக கணித்து கேப்டன் ரோகித் சர்மாவிடம் கூறினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்ற பெற மிக முக்கியமாக இருந்த இருவரில், பந்துவீச்சில் கலக்கிய ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
Had lost hopes from the Ind vs Pak match, but damn those last 3 overs!
Mazza aa gaya! #IndVsPak #RishabhPant #JaspritBumrah pic.twitter.com/Sgb5DdrLF8
— Bollywood Talkies (@bolly_talkies) June 9, 2024