மே 20, மதுரை (Madurai News): தென் தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மிக கனமழை எச்சரிக்கையும், மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி உட்பட பிற மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது. அதேபோல, பல இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. நேற்று மதுரை மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர் மழையானது பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் குளுகுளு சூழ்நிலைக்கு உள்ளாகினர். Good Bad Ugly: 2025 பொங்கலுக்கு களமிறங்கும் அஜித்தின் குட் பேட் அக்லி; படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மாநகரில் பல இடங்களில் வெள்ளம்: இந்நிலையில், மதுரையில் பெய்த தொடர் மழையின் எதிரொலியாக தல்லாகுளம் பகுதியில் உள்ள வீதிகளில் மழைநீர் வெளியேற இயலாமல் வீதிகளில் தேங்கி நின்றது. சிம்மக்கல், ஆரப்பாளையம் பகுதியில் உள்ள பாலத்தை பயன்படுத்த இயலாமல் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மே 20ம் தேதியான இன்றும் தென்மாவட்டங்களில் அதிக கனமழைக்கான எச்சரிக்கையும், விருதுநகர், கோவை, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டத்தில் மிக கனமழைக்கான எச்சரிக்கையும், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Madurai pic.twitter.com/gWnpuJNhhx
— Tenkasi Weatherman (@TenkasiWeather) May 19, 2024