Drainage Cleaning (Photo Credit @henry_okram X)

ஜூன் 19, நாமக்கல் (Namakkal News): கழிவு நீர் தொட்டி, பாதாள சாக்கடை போன்றவற்றை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், செலவு குறைவு என்கிற காரணத்தால் மனிதர்களை இப்பணியில் ஈடுபடுத்தும் நிலை நீடித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் பதிவாகின்றன. Delhi Firing Incident: டெல்லி உணவு விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் பலி.. டெல்லியில் பரபரப்பு..!

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்கள் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகளை மனிதர்களை கொண்டு சுத்தப்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். மேலும் அவ்வாறு செய்பவர்கள் மீது இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றார்.