செப்டம்பர் 30, குன்னூர் (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள குன்னூர் அரசு லாலி மருத்துவமனை, அலய்சேட் காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 42). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு வர்ஷா, வையு என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். Annamalai On Dy CM Udhayanidhi: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்; மறைமுகமாக திமுகவை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை.!
மண்ணில் புதைந்த சோகம்:
இதனிடையே, நேற்று இரவு 9 மணி அளவில் மீண்டும் குன்னூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தம்பதிகள் வசித்து வந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், சத்தம் கேட்டு கதவை திறந்து வெளியே ஜெயலட்சுமி வெளியே வந்துள்ளார். அப்போது, வேகமாக அடித்து வரப்பட்ட நிலச்சரிவு & மண்ணில் சிக்கி புதைந்து போனார். பிற மூவரும் வீட்டிலிருந்து வெளியே வர இயலாமல் சிக்கிக் கொண்டனர்.
ஆசிரியை பலி:
இந்த விஷயம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வீட்டிற்குள் இருந்த தந்தை மற்றும் மகள்களை பத்திரமாக மாற்றினார் மேலும் மண்ணில் புதைந்த ஜெயலட்சுமி என்னுடன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின் சடலமாக அமைக்கப்பட்டது இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது