அக்டோபர் 22, சென்னை (Chennai News): தமிழகத்துக்கு அதிக மழைபொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதன் அறிகுறிகளாக வங்கக் கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்றுமதியம் வலுப்பெறும். தற்போதைய நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
பருவமழை தீவிரம்:
இதனால் வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. தற்போது தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், அரபிக்கடலில் உருவான தாழ்வு மண்டலத்தால் தென்தமிழகத்திலும் மழை தொடருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கி வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றால், வடமாவட்டங்களில் வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யலாம். குறிப்பாக வடகடலோர மாவட்டங்கள், வட தமிழக மாவட்டங்களில் கனமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. Gold Rate Today: தித்திப்பு செய்தி.. தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைவு.. உற்சாகத்தில் நகைப்பிரியர்கள்.!
எந்தெந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட் (Today Weather Alert)?
இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
சென்னை வானிலையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்க கூடும்.