ஏப்ரல் 03, கோயம்புத்தூர் (Coimbatore): கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை (Tamil Nadu BJP president K Annamalai) பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் (Vanathi Srinivasan) மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று இரவு வள்ளி கும்மி நடன குழுவினருடன் அண்ணாமலை வள்ளி கும்மி நடனம் ஆடி வாக்குசேகரித்தார். திடீரென அண்ணாமலை நடனமாடியதால், அனைவரும் உற்சாகத்தில் குதூகலித்துள்ளனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. Bharat Jodo Nyay Yatra: ராகுல் காந்தியின் பாதை யாத்திரை: ஓட்டுநர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பள பாக்கி - பரபரப்பு குற்றச்சாட்டு.!
மேலும் அப்போது பேசிய அண்ணாமலை, "வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும்" என்றார்.
VIDEO | Tamil Nadu BJP president K Annamalai (@annamalai_k) was seen doing 'Valli Kummi' dance with locals yesterday during campaigning for Lok Sabha election in #Coimbatore's Vellakinar area.#LSPolls2024WithPTI #LokSabhaElections2024
(Full video available on PTI Videos -… pic.twitter.com/eWyxvyCWu4
— Press Trust of India (@PTI_News) April 3, 2024