மார்ச் 19, புதுக்கோட்டை (Pudukkottai News): புதுக்கோட்டை மாவட்டம் அருகே உள்ள தென்னந்திரையான்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ஞானசேகர்-ஜெயந்தி. இத்தம்பதியினர் வீட்டில் பசுமாடு வளர்த்து வருகின்றனர். அந்த பசுமாடு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு மொத்தம் ஆறு கால்கள் இருந்தது. வழக்கத்தை விட இரண்டு கால்கள் அதிகமாக இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். மேலும், இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கால்நடை உதவி மருத்துவர் நிகழ்விடத்திற்கு வந்து பசுவையும், கன்றினையும் பார்த்தார். பின்னர், கன்றுக்குட்டியின் இதய துடிப்பு, மூச்சுக்காற்று, வெப்ப ஓட்டம் என அனைத்தையும் ஆய்வு செய்தார். School Leave: தேர்தல் எதிரொலி… மாணவர்களுக்கு விடுமுறையை அள்ளிக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..!
கால்நடை மருத்துவரின் ஆய்வுக்கு பிறகு அவர் கூறுகையில், இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுக்குட்டி பிறப்பது பாலிமெலியா ஆகும். மேலும், இது மரபணு கோளாறு எனப்படும் குரோமோசோம் பிரிதலில் உண்டாகக்கூடிய மாற்றத்தினாலும், விட்டமின், கதிர்வீச்சு மற்றும் வேதியியல் மாற்றத்தினாலும் நிகழ வாய்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே கன்றுக்குட்டியின் உரிமையாளர் அதனை கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக கூறினார். இருப்பினும், கன்றுக்குட்டிக்கு குடற்புழு நீக்கும் மருந்து மற்றும் கால்சியம் கலவை கொடுத்து நன்கு பராமரித்து வளர்க்க வேண்டும் என கால்நடை மருத்துவர் அறிவுறுத்தி சென்றுள்ளார்.