Car Lorry Accident (Photo Credit: @xpressandhra X)

மே 18, அனந்தபூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டம், குத்தி அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் (National Highway NH-44) இன்று காலை அனந்தபூரில் உள்ள ராணிநகரில் வசித்து வரும் 7 பேர் ஹைதராபாத்தில் இருந்து அனந்தபூர் மாவட்டத்திற்கு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, குத்தியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராயல் தாபா என்ற இடத்தில் செல்லும்போது, திடீரென கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புசுவரில் மோதியது. அந்த சமயத்தில் அங்கிருந்து வந்த, ஹைதராபாத் நோக்கி சென்ற லாரி ஒன்று கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. Engineering Student Suicide: ஆன்லைன் சூதாட்டம்; ரூ.3 லட்சம் பணத்தை இழந்து, என்ஜீனியரிங் மாணவர் தற்கொலை..!

இந்த விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேரை குத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்தவர்கள் அல்லி சாஹேப் (வயது 58), ரெஹானா பேகம் (வயது 40), ஷேக் சுரோஜ் பாஷா (வயது 28), முகமது அயன் (வயது 6), அமன் (வயது 4) ஆகிய 5 பேரையும் அடையாளம் காணப்பட்டது.

இதில், ஷேக் சுரோஜ் பாஷா என்பவருக்கு இம்மாதம் 27-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக திருமண ஆடைகள் வாங்க ஹைதராபாத் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வரும் வழியில், இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, குத்தி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், இந்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்தது.