Chitra Pournami in Kanyakumari (Photo Credit: @backiya28 X)

ஏப்ரல் 25, கன்னியாகுமரி (Kanyakumari News): எப்போதும் கன்னியாகுமரியில் சித்திரை பௌணர்மி அன்று, கிழக்கு நீலக்கடலில் இருந்து வட்ட நிலவு கொஞ்சம், கொஞ்சமாக முழு நிலவு கடல் பரப்பில் இருந்து சிறிது, சிறிதாக உயர்ந்து வருவது என்பது இயற்கையின் அதிசயம். அதன்படி சித்திரை பௌர்ணமி தினமான இன்று, சித்திரை பௌர்ணமி சந்திரன் உதயத்தை காணும் ஆசையில் பல்வேறு மொழி மக்கள் இன்று கன்னியாகுமரி, முக்கடல் சங்கமத்தில் பெரும் கூட்டமாக கூடி கிழக்கு திசையை நோக்கி, சுற்றுலா பயணிகள் கண் இமைகள் அசையாமல் பார்த்துக்கொண்டு நின்றனர். Vadakkan Teaser: ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது..’ வடக்கன் படத்தின் டீசர் வெளியீடு..!

ஆனால் மேற்கு பகுதி கீழ் வானில் என்றும் போல், இன்றும் சூரியன் ஓய்வு எடுக்க கீழ் கடலில் முங்கி அஸ்தமானது. கிழக்கு பகுதி நீலக்கடலில் கருமேகங்கள் சூழ்ந்து இருந்த நிலையில் சித்திரை மாதம் பௌர்ணமி முழு நிலவு திருவள்ளுவர் சிலைக்கு மேல் வான் பரப்பில் மெல்லியதாக வெளிப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.