PET kicking students (Photo Credit: @Neethiman3 X)

ஆகஸ்ட் 12, கொளத்தூர் (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கால்பந்து (Football) போட்டியில், அந்த பள்ளி அணி தோல்வியை தழுவியது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் (PET) அண்ணாமலை, அந்த மாணவர்களை தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி, மாணவர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். Mother Killed Daughter: 7 வயது மகளை கொலை செய்த கொடூர தாய்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!

இதனை அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள முதன்மை செயல் அலுவலர் கபீருக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்த விசாரணையில், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் கால்பந்து போட்டியில் தோல்வியடைந்ததற்காக மாணவர்களை தாக்கியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட நிர்வாகம் அளித்த உத்தரவின்பேரில், அந்த ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு மெமோ வழங்கியது. அதற்கு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்து, பள்ளியின் தாளாளர் கிறிஸ்டிராஜ், அவரை பணியிடை நீக்கம் (Suspend) செய்து உத்தரவிட்டார்.