ஜூலை 24, சென்னை (Chennai News): இன்றைய காலத்தில் செல்போனில், வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாக மாறிவிட்டது. மேலும், ரீல்ஸ் என்ற பெயரில், அன்றாட வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகளை கூட வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர். பொதுவெளியில், இவ்வாறு நடந்து கொள்வது பொதுமக்களுக்கு பல இடையீறுகளை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். Gold Rate Today: அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
ரீல்ஸ் எடுத்தால் அபராதம்:
ரயில் நிலையங்களில் ரீல்ஸ் வீடியோ எடுப்பதை அதிகமானோர் செய்து வருகின்றனர். ஓடும் ரயிலில் சாகசம் என்ற பெயரில் படியில் தொங்கி கொண்டு ரீல்ஸ் எடுப்பதும், தண்டவாளத்தில் ஆபத்தை உணராமல் ரீல்ஸ் எடுப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதன்காரணமாக, பல உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனைத் தடுக்கும் முயற்சியில் ரயில்வே துறை அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை:
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விதிகளின் படி ரயில் நிலையங்களில் செல்போனில் வீடியோ எடுக்கக்கூடாது. புகைப்படம் எடுக்கலாம். ஆனால், சிலர் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுகிறது. ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகியவற்றில் செல்போனில் ரீல்ஸ் எடுக்கும் நபர்களை கண்காணித்து வருகிறோம். ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சிசிடிவி கேமரா மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகளுக்கு அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் எடுத்தால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.