Rescue Operations (Photo Credit: @IN_HQTNP X)

டிசம்பர் 18, திருநெல்வேலி (Tirunelveli): வரலாறு காணாத மழை பெய்த நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று இரவு மழை குறைந்தது. மேலும் தென்காசியில் நேற்றிரவு விட்டு விட்டு சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. இருப்பினும் இந்த மழையால் பல இடங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் தனித்தீவு போல காட்சி அளிக்கின்றன. வீடுகளை மூழ்கடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர். Ram Mandir Necklace Video: 5000 வைரங்கள், 2 கிலோ தங்கத்தில் அயோத்தி ராமர் கோவில் தோற்றத்தில் தயாரிக்கப்பட்ட நெக்லஸ்: அசரவைத்த வைர வியாபாரின் நெகிழ்ச்சி செயல்.!

மீட்பு பணிகள் தீவிரம்: இதனைத் தொடர்ந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு சிக்கி தவிக்கும் மக்களை மீட்க ராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட முப்படைகளையும் உதவிக்கு அழைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று இந்திய கடற்படையின் ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி தொடங்க உள்ளது. அதேபோல், ஹெலிகாப்டர் மூலமாக உணவு பொட்டலங்களும் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.