டிசம்பர் 18, சூரத் (Gujrat News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்படும் என பாஜக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பல ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 2020ல் ராமர் கோவில் கட்டும் பணிகள் விறுவிறுப்புடன் தொடங்கின. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.

ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் & திறப்புத்தேதி: 70 ஏக்கர் நிலப்பரப்பில், 2.7 ஏக்கர் அளவில் கோவில் கட்டும் பணிகள் ரூ.1800 கோடி பொருள் செலவில் நடந்து வருகின்றன. 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவிலை திறக்க விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. ராமர் கோவிலை கட்டுவதற்கு இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்து அமைப்பினர் நிதிகளை குவித்து வருகின்றனர்.

வைர வியாபாரியின் அசத்தல் செயல்: இந்நிலையில், குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி, ராமர் கோவிலுக்கான பரிசாக அசரவைக்கும் நெக்லஸ் ஒன்றை தயார் செய்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியை சேர்ந்தவர் கௌஷிக் ககாடியா, வைர வியாபாரி மற்றும் ராசேஷ் ஜுவல்லரி உரிமையாளர் ஆவார். இவர் ராமர் கோவிலுக்காக பரிசளிக்க நெக்லஸ் தயார் செய்துள்ளார். Baby Care Tips: குழந்தைகளின் அழுகைக்கான காரணங்கள் என்ன?. சரி செய்வது எப்படி?.. கைக்குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே, தெரிஞ்சிக்கோங்க.! 

ராசேஷ் ஜூவல்ஸின் இயக்குனர், கௌசிக் ககாடியா (Photo Credit: @ANI X)

பிரம்மிக்கவைக்கும் தயாரிப்பு: 35 நாட்களில் 40 நகை வடிவமைப்பாளர்கள் முயற்சியில், 5 ஆயிரம் அமெரிக்க வைரங்கள், 2 கிலோ தங்கம் ஆகியவை பயன்படுத்தி நெக்லஸ் ராமர் கோவிலை போல உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல, ராமாயணத்தில் முக்கிய தெய்வங்களாக கருதப்படும் ஸ்ரீ ராமர், சீதா தேவி, இலக்குவன் மற்றும் அனுமார் ஆகியோரின் உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு அல்ல: இதுகுறித்து கருத்து தெரிவித்த கௌஷிக், "சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான அமெரிக்க வைரங்கள், 2 கிலோ தங்கத்தால் ராமர் கோவிலின் தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது விற்பனைக்காக எங்களால் செய்யப்படவில்லை. நாங்கள் ராமர் கோவிலுக்கு இதனை பரிசளிக்கவுள்ளோம். எங்களின் நினைவாக, வித்தியாசமான முறையில் பரிசளிக்க நினைத்தபோது நகை செய்யும் எண்ணம் வந்தது. நெக்லஸில் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பற்றுள்ளன" என தெரிவித்தார்.