Fishermans Return TN From SriLanka (Photo Credit: @ANI X)

நவம்பர் 23, சென்னை (Chennai): இந்திய கடலோர எல்லைக்குள், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இராமந்தபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அச்சமயம், அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடித்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களின் மீன் வலைகளை சேதப்படுத்தினர்.

பின், படகுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இலங்கைக்கு அவர்களை கைது செய்து அழைத்துச்சென்றனர். இவர்களை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசிடம் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. Karthigai Deepam 7th Day: பஞ்ச ரதத்தில் மக்களுக்கு காட்சிதந்த அருணாச்சலேஸ்வரர்: வீடியோ உள்ளே.! 

Rameswaram Fisherman Return TN 23 Nov 2023 (Photo Credit: @IndiainSL X)

இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை அரசுக்கு கடிதமும் எழுதினார். இதனையடுத்து, இலங்கை அரசு தாங்கள் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை விடுவிக்க ஒத்துழைத்தது.

இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து விமான உதவியுடன் இன்று சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை வந்த தமிழக மீனவர்களுக்கு, பாஜக சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டன.