Sakthivel (Photo Credit: @backiya28 X)

பிப்ரவரி 15, மதுரை (Madurai): மதுரை தேவர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் பாஜக ஓபிசி பிரிவு மாவட்டச் செயலாளராக (BJP OBC Madurai District Secretary) இருந்தார். இவர் மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே டூவீலரில் இன்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை டூவீலரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் வழிமறித்து, சக்திவேலை (Sakthivel) ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது. இதன் பின் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. Ratha Saptami 2024: நாளை ரத சப்தமி... திருப்பதியில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்..!

இந்த கொலை சம்பவம் குறித்த தகவல் அறிந்த அண்ணாநகர் காவல் துறையினர், விரைந்து சென்று சக்திவேல் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் தனிப்பட்ட மோதல் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.