ஜனவரி 3, சேலம்: பெரியாரிய கொள்கையில் ஈடுபாடு கொண்ட 23 வயது இளைஞர், தனது காதலிக்கு (Salem Couple Tie Knot) சிவன் கோவிலில் வைத்து தாலிக்ட்டிவிட்டு பெரியார் சிலை முன்பு சுயமரியாதை திருமணமும் செய்துகொண்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி (Panamarathupatti, Salem) பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 23). இவர் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் (Bodinayakanur, Theni) பகுதியை சேர்ந்த இளம்பெண் கௌசல்யா (வயது 20). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் பாவை பொறியியல் கல்லூரியில் படித்தபோது காதல் மலர்ந்துள்ளது.
காதல் ஜோடி வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வசந்தகுமார் பெரியாரிய கொள்கையில் பற்றுள்ளவராக இருந்து வந்துள்ளார். இருவரின் சமூகத்தை காரணம் காண்பித்து பெற்றோர்கள் இருதரப்பிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, காதல் ஜோடி தங்களின் வீட்டை விட்டு வெளியேறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இருக்கும் பெரியார் சிலைமுன்பு சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. TTF Vasan Car: கமலா தியேட்டரில் அப்பாவியாக சிக்கிக்கொண்ட டிடிஎப்.. ரூ.500 அபராதம் விதித்து காரை பறிமுதல் செய்த அதிகாரிகள்.!
அப்போது, செய்தியாளர்கள் காதல் ஜோடியிடம் விசாரணை செய்தபோது, சுயமரியாதை திருமணம் செய்த பெண்ணின் கழுத்தில் மஞ்சள் தாலி துப்பட்டாவால் மறைக்கப்பட்டு இருந்தது. அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அங்கு செய்தியாளர்களுக்கும் - வசந்தகுமாரின் நண்பர் ஒருவருக்கும் இடையே காரசாரமான விவாதமும் நடந்தது.
விசாரணையில், காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி முதலில் சிவன் கோவிலில் வைத்து மஞ்சள் தாலி கட்டி திருமணம் செய்துகொண்ட பின்னர், சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பெரியார் சிலையில் சுயமரியாதை திருமணம் நடந்தது உறுதியானது.
சம்பவத்தில் வசந்தகுமாரின் நண்பர் செய்தியாளர்களை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்ததால், நிலைமையை உணர்ந்த பெரியாரிஸ்டுகள் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்து செய்தியாளர்களை அமைதியாக்கினார். தாலி குறித்து கேள்வி எழுப்பியபோது புதுமணப்பெண் கதறி அழுதார். காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.