ஜூன் 22, சென்னை (Chennai News): தமிழக சட்டப்பேரவையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் (Rural Development and Panchayat Department) சில முக்கிய திட்டங்களின் தொகுப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்பு பணிகள்: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு தகனமேடை: சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றும் வகையில் தமிழகத்தில் 10 எரிவாயு தகனமேடைகள் கட்ட சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்: ரூ. 20 கோடி செலவில் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
குழந்தைகள் நேய வகுப்பறைகள்: ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 1100 குழந்தை நேய வகுப்பறைகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டித்தரப்படும்.
நியாய விலைக்கடை: தமிழக கிராமப் புறங்களில் 500 நியாய விலைக்கடைகள் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Ginger Juice Benefits: இஞ்சி சாறு பருகுவாதல் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
புதுக்கோட்டை ஊராட்சி அலுவலக வளாகம்: 2024-2025 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகம் கட்டப்படும்.
பள்ளிகளில் சுற்றுச்சுவர்: ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 500 பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் அமைக்கப்படும்.
சிறு பாலங்கள் அமைப்பு: ஊரக பகுதி சாலைகளில் குறுக்கே செல்லும் ஓடைகள் மற்றும் வடிகால்கள் மேல், ரூ.140 கோடி மதிப்பீட்டில் 500 சிறு பாலங்கள் கட்டப்படும்.
குளங்கள் அமைக்கும் பணி: ரூ. 250 கோடியில் மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும் 5000 புதிய குளங்கள் அமைக்கப்படும்.
புதிய வாகனங்கள்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளை கண்காணிக்க கள அலுவலர்களுக்கு ரூ. 44 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
கசிவுநீர் மற்றும் மரம் நடுதல் பணிகள்: 2500 கிராம ஊராட்சிகளில் மேய்க்கால் நிலங்களை பாதுகாத்து கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.