செப்டம்பர் 05, பழனி (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை (Scholarship) அபகரிப்பு செய்த ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில், அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு, சின்னக்கலையம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா (வயது 55), ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இதே பள்ளியில் தலைமை ஆசிரியராகவும் இருந்துள்ளார். அப்போது, ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட உதவித் தொகை பல லட்சத்தை கையாடல் (Embezzlement) செய்தது தெரியவந்தது. Snake Infestation: நெளிந்த பாம்புகள்; செய்யாறு அரசுக் கல்லூரி பெண்கள் கழிவறையில் அதிர்ச்சி.!
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் பழனி தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியை விஜயாவை நேற்று (செப்டம்பர் 04) கைது செய்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.