Snakes Found on Toilet (Photo Credit: @gvprakash X)

செப்டம்பர் 04, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்டத்தில் உள்ள செய்யாறு (Cheyyar), ஆற்காடு சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலை & அறிவியல் கல்லூரி (Arignar Anna Govt Arts & Science College) செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 8000 க்கும் அதிகமான மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு காலை, மாலை என பகுதி நேரமாக பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனிடையே, கல்லூரியில் இருக்கும் பெண்கள் கழிவறை, சுத்தமானதாக இல்லை. School Bus Accident: போட்டாபோட்டியால் பயங்கரம்; பள்ளி பேருந்து புளியமரத்தில் மோதி 15 மாணவர்கள் படுகாயம்.! 

கழிவறை கோப்பையில் பாம்பு:

முறையான பராமரிப்புகள் இல்லாமல், கழிவறைக்கு செல்லும் வழியில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பாம்பு போன்ற விஷ பூச்சிகளும் அங்கு உலாவி வரும் நிலையில், மாணவிகள் அச்சத்துடன் அங்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில், கழிவறைக்குள் சென்ற பாம்பு ஒன்று பல குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் கழிவறை கோப்பையில் பாம்புகள் உலாவி வருகின்றன. இதனால் கல்லூரி நிர்வாகமே கழிவறையை பயன்படுத்த வேண்டாம் என எழுதி ஒட்டி இருக்கிறது.

முதல்வர் விளக்கம்:

சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் பயின்று வரும் கல்லூரியில், கழிவறையை அவசரத்திற்கு கூட பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்த காணொளியும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நிலையில், புதர்களை சீரமைக்க ஆணையிட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பு கருதி, கழிவறையில் பாம்புகள் இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அதனை உபயோகப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பை பிடித்து வெளியே விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

கழிவறை கோப்பையில் கூட்டமாக பாம்புகள்:

கடமையை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்: