டிசம்பர் 18, தூத்துக்குடி (Thoothukudi): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
காயல்பட்டினத்தில் கொட்டி தீர்த்த மழை: நேற்று காலை ஆறு மணிக்கு மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் 361 மி.மீ. மழை பெய்திருக்கிறது. அதிலும் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பெய்திருக்கிறது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 351 மி.மீ. மழை பெய்திருக்கிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. Evgo Money Earning App Scam: உழைத்த பணத்தை, ஒரு வாரத்தில் இரட்டிப்பாக்க எண்ணி சோகம்: மக்களிடம் விபூதி அடித்த கும்பல்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.!
ரயில் சேவைகள் ரத்து: மழை காரணமாக சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், நெல்லை- ஜாம்நகர் விரைவு ரயில், திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயில், சென்னை- குருவாயூர் விரைவு ரயில், திருச்சி- திருவனந்தபுரம் விரைவு ரயில், நாகர்கோவில்- கோவை விரைவு ரயில், தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில், வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி முன்பதிவில்லா ரயில்கள், நெல்லை- தூத்துக்குடி பயணிகள் ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக மதுரை ரயில்வே அறிவித்துள்ளது.
நிரம்பி வழியும் அணைகள்: அதீத மழையால் பாபநாசம் அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்டவற்றில் நீர் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அங்கிருந்து உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. Bike Stunts: அதிவேக பைக்: தற்கொலை படையாக மாறும் சிறுவர்கள்..?
கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை: இந்த அதீத மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அன்பின் நகரம் கிராமத்தில் தொடர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்பின் நகரம் கிராமத்தைச் சேர்ந்த அபர்ணா என்ற இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளதால் அந்த கர்ப்பிணி பெண்ணை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தூக்கி சென்று ஆம்புலன்ஸில் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் தென்மாவட்ட மக்கள் திக்குமுக்காடி நிற்கின்றனர். சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்கள் புயல், கனமழை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. ஆனால், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மக்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படியான வெள்ளத்தை பார்க்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அன்பின் நகரம் கிராமத்தைச் சேர்ந்த அபர்ணா என்ற இளம் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் மழைநீர் அதிக அளவு தேங்கியுள்ளதால் அந்த கர்ப்பிணி பெண்ணை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தூக்கி சென்று ஆம்புலன்ஸில் ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது pic.twitter.com/syhCrtIpwG
— Backiya (@backiya28) December 18, 2023