ஜூன் 26, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், பெரிய மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக பணிகளுக்காக வந்திருந்த அர்ச்சகர்கள் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. கோவில் உதவி அர்ச்சகர் கோமதி விநாயகம், தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் ஆகியோர் வீட்டில் மது போதையில் நடனமாடியதாகவும் கூறப்படுகிறது. வானிலை: இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்களால் பரபரப்பு:
அர்ச்சகர்களின் செயலால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டு அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் மூவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்காலிக அர்ச்சகர்கள் வினோத், கணேசன் பணிநீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் பெரிய மாரியம்மன் கோவிலில் பூஜையில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டு அவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இணையத்தில் ட்ரெண்டான வீடியோ :
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. மேலும் வழக்கறிஞர் பாண்டியராஜ் அளித்த புகாரின் பேரில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் நடன வீடியோவை வெளியிட்ட சபரிநாதன் என்பவர் மீதும் போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.
அர்ச்சகர்கள் ஆபாச நடனமாடிய வீடியோ :
#Watch | ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயில் அர்ச்சகர்களின் ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சை.. கோயில் வளாகத்தில் பெண் பக்தருடன் விபூதி அடித்து விளையாட்டு..
அர்ச்சகர்களின் செயலால் பெரிய மாரியம்மன் கோயில் பக்தர்கள் அதிருப்தி. அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.… pic.twitter.com/NLrVy1HFG4
— Sun News (@sunnewstamil) June 26, 2025
வீடியோ நன்றி : Sun News