Drivers | MP Rahul Gandhi (Photo Credit: @ians_india @ani X)

ஏப்ரல் 03, புலந்த்ஷாஹர் (Uttar Pradesh): 'பாரத் ஜடோ நியாய யாத்திரை' (Bharat Jodo Nyaya Yatra) என இரண்டாம் கட்ட யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி (Congress MP Rahul Gandhi) மேற்கொண்டார். மணிப்பூரில் தொடங்கி மொத்தமாக 15 மாநிலங்கள், 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்ற தொகுதிகள் என 67 நாட்கள் மேற்கொண்டார். சில இடங்களில் பேருந்திலும், பல இடங்களில் நடத்தும் சுமார் 6,713 கி.மீ தூரத்தை ராகுல் காந்தி இந்த யாத்திரை மூலம் கடந்தார். Indian Economy Growth Projection: "இந்தியாவுக்கே பெருமை" 2023-2024ம் நிதியாண்டில் உச்சம் பெறும் இந்திய பொருளாதாரம்: உலக வங்கி கணிப்பு..!

இந்நிலையில் இந்த யாத்திரையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு இலட்சக்கணக்கில் சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேச புலந்த்ஷாஹர் பகுதியில் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.