ஜனவரி 24, சென்னை (Chennai News): வானிலையில் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (24-01-2025) நாளையும் (25-01-2025) வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
வானிலை (Weather):
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 26 முதல் 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Vengaivayal: வேங்கைவயல் விவகாரம்; குடிநீர் தொட்டியில் அசுத்தம் செய்தவர்கள் யார்? - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை..!
சென்னையில் மழைக்கு வாய்ப்பு (Chennai Weather Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (24-01-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.