ஜனவரி 24, சென்னை (Chennai News): வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் (Vengaivayal drinking water tank) மலம் கலந்த விவகாரம் கடந்த 2022 ஆம் ஆண்டில் மாநில அளவில் பெரும் பேசுபொருளானது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உயர்நீதிமன்றம் (Madras High Court) உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த வழக்கு (Vengaivayal case) தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து, குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துறையினர் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு (Tamil Nadu government) தெரிவித்துள்ளது. Senthil Balaji: மாதம் ஒருமுறை மின்கட்டணம் - மகிழ்ச்சி செய்தியை கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி.!
குற்றப்பத்திரிகை:
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழக அரசு, முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் இந்த குற்றம் நடந்துள்ளதாகவும், முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அறிக்கையை மனுவாக தாக்கல் செய்யும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டு, விசாரணையை பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்துள்ளனர்.