ஜூன் 20, சென்னை (Chennai): 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர், தமிழ்நாடு சட்டப்பேரவை (Tamilnadu Legestive Assembly) ஜூன் 20ம் தேதியான இன்று காலை 10 மணியளவில் கூடியது. இன்று தொடங்கியுள்ள சட்டப்பேரவை, ஜூன் 29 வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை 10 மணியளவில் சட்டப்பேரவை கூடிய நிலையில், முதலில் இரங்கல் தீர்மானம் சபாநாயகர் அப்பாவுவால் வாசிக்கப்பட்டது.
இரங்கல் குறிப்பு:
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ். மாணிக்கராஜ், ரவிக்குமார், தனராஜ், சின்னசாமி, ராமகிருஷ்ணன், கணேசமூர்த்தி, வேணுகோபால், அன்பழகன், இராமவீரப்பன், இந்திரகுமாரி, ராஜு, புகழேந்தி உட்பட 17 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவை உறுப்பினர்கள் அனைவரும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அமைதிகாத்தனர். அதேபோல, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. Vijay Condolences on Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண விவகாரம்; நடிகர் & த.வெ.க தலைவர் இரங்கல்.!
கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு இரங்கல்:
அதன்தொடர்ச்சியாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் அருந்தி மரணமடைந்த 36 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த செய்தியை அறிந்து பேரவை அதிர்ச்சி அடைந்ததாகவும் சபாநாயகர் அப்பாவு தனது உரையை குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் சபாநாயகர் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
துறை ரீதியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதமும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். அதேபோல, நாளை காலை முதல் காலை 09:30 மணி முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். காலை - மாலை என இரண்டு வேலைகளிலும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் விறுவிறுப்புடன் நடைபெறவுள்ளது.
இரங்கல் குறிப்பு தீர்மானத்துடன் இன்றைய சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு, நாளை மீண்டும் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும்.