ஜனவரி 10, சென்னை (Chennai): தமிழக போக்குவரத்து கழகத்தை சேர்ந்த சிஐடியு மற்றும் ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கத்தினர், போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Maestro Ustad Rashid Khan Died: பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி.!
இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் குறித்த கணக்கினை எடுக்கும் பணி தற்போது தமிழ்நாடு முழுவதும் துவங்கி உள்ளது. மேலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.