வானிலை: 18 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் மழை.. மக்களே குடையோடு போங்க.!
தமிழகத்தில் இரவு 7 மணிவரை கடலூர், தூத்துக்குடி உட்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய (Weather Today) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றைய வானிலை நிலவரம் குறித்து காணலாம்.
செப்டம்பர் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்திருந்தது. வானிலை: அடுத்த 4 நாட்களுக்கு மிரட்டப்போகும் கனமழை.. இன்றைய, நாளைய வானிலை நிலவரம்.!
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், திருப்பூர், நீலகிரியில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather) :
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Sep 16, 2025 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

