ஆகஸ்ட் 16, நுங்கம்பாக்கம் (Chennai News): வடமேற்கு அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல், தெற்கு ஒரிசா, வடக்கு கடலோர பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆகஸ்ட் 15ஆம் தேதியான நேற்று தெற்கு ஒரிசா, அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது. தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் இன்றைய வானிலை (Today Weather)-யில் (ஆகஸ்ட் 16) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு பொளக்கப்போகும் கனமழை.. இன்றைய வானிலை நிலவரம் இதோ.!
மிதமான மழை:
தலைநகர் சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகலாம். நாளைய வானிலை (Tomorrow Weather)ஐ பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
இந்நிலையில், காலை 10 மணி வரையில் கீழ்காணும் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.