அக்டோபர் 14, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, வரும் 24 மணி நேரத்தில் நகரக்கூடும். இதனால் அக்.14ம் தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Stray Dogs Dies: மின்சாரம் தாக்கி 3 தெருநாய்கள் பரிதாப பலி; நெஞ்சை ரணமாக்கும் நேரடி காட்சிகள்..!
இன்று மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் (Today Rain Alert):
விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் (Red Alert Tamilnadu), சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் நான்கு நாட்களுக்கு சென்னையில் கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை:
அதேபோல, நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கைக்கப்பட்டு இருந்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகருக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டால், அங்கு இருக்கும் நீரை அகற்றி வெளியேற்றவும், தாழ்வான பகுதிகளை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஐடி நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துமாறும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அவசர அழைப்புகளுக்கு 1913 என்ற மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.