பிப்ரவரி 20, சென்னை (Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் சார்பில், வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. காலை 10 மணியளவில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதைத்தொடர்ந்து, அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அமைச்சரின் அறிவிப்புகள் பின்வருமாறு.,
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்: மண்வளம் பேணி காக்கவும் மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளை ஊக்கப்படுத்திட முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்காக ரூபாய் 26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பசுந்தால் உரம் பயிரிட ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதனால் 2 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். மண்புழு உரம் ஊக்குவிக்கும் திட்டத்திற்காக ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10,000 அதிகமான விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுகைகள் இதன் வாயிலாக அமைத்து கொடுக்கப்படும். களர் அமில நிலங்களை சீர்படுத்துவதற்காக ரூபாய் 22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Rituraj Singh Passed Away: துணிவு திரைப்பட பிரபலம்... மூத்த நடிகர் மாரடைப்பால் காலமானார்..! சோகத்தில் திரையுலகினர்..!
மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க: கலைஞரின் அனைத்து கிராமம் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்காக, ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெறும் வகையில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூபாய் 200 கோடி மதிப்பீடில் திட்டம் செயல்படுத்தப்படும். வேளாண் காடுகள் மூலம் பூச்சி நோய் தாக்குதல் கட்டுப்படுத்த பத்து லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூபாய் இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆடாதோடா, நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்க்க ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சீவன் சம்பா பாரம்பரிய நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை வினியோகம் செய்யப்படும். நெல் ஜெயராமனின் மரபு சார் நெல் ரகங்களை பாதுகாக்க, 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு பத்தாயிரம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க: 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூபாய் 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உயிர்ம வேளாண்மை மாதிரி பண்ணைகளை ஏற்படுத்துவதற்கு ரூபாய் 38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலமாக ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, மண் வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ரசாயன மருந்துகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிரிட ரூபாய் 36 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படாத சிறப்பு வேளாண் கிராமங்களை உருவாக்க ரூபாய் 1.48 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. Women Cheated by Lover: காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டேன்., ஆட்சியர் காலில் விழுந்து கதறிய இளம்பெண்.. கண்ணீர் சோகம்.!
'ஒரு கிராமம் ஒரு பயிர்' சிறப்புத்திட்டம்: 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூபாய் 42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. துவரை சாகுபடியை 50,000 ஏக்கர் பரப்பில் செயல்படுத்த ரூபாய் 17.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சூரியகாந்தி உட்பட எண்ணெய் வித்துக்கள் பயிர் சாகுபடிக்காக ரூபாய் 45 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டத்தின் வாயிலாக 15,250 வருவாய் கிராமத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டு, மகசூல் அதிகரிக்கப்படும். நிரந்தர பூச்சி கண்காணிப்பு திறல்களும் அமைக்கப்படும். ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்களில் உற்பத்தி மற்றும் சாகுபடி திறனை அதிகரிக்க ரூபாய் 65.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சர்க்கரை சாகுபடி மேம்படுத்த: இயற்கை சீற்றத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து மீண்டு வர பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூபாய் 1775 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூபாய் 215 வழங்கப்படும். சர்க்கரை ஆலை செயல் திறனை மேம்படுத்த ரூபாய் 12.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கரும்பு சாகுபடியை மேம்படுத்துவதற்கு ரூபாய் 20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.