Republic Day Celebration Chennai (Photo Credit: @ANI X)

ஜனவரி 26, சென்னை (Chennai): ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து வெள்ளையர்களின் ஆட்சி அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் பொருட்டு குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் தனது நாட்டினை பாதுகாக்கும் படைகளில் மறைந்த வீரர்களுக்காக வீரவணக்கம் செலுத்திவிட்டு, அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண்பார். குடியரசு தலைவர், பிரதமர், மக்கள் முன்னிலையில் மாநில வாரியாக சிறப்பு பேரணியும் நடத்தப்படும். PM Modi Wish on Thaipoosam: "முருகனின் அருள் எப்போதும் நம்மீது இருக்கட்டும்" - பிரதமர் நரேந்திர மோடியின் தைப்பூச வாழ்த்து.! 

மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார் தமிழ்நாடு ஆளுநர்: குடியரசு தினத்தில் நாட்டிற்கு மிகப் பெரும் சேவை புரிந்த படை வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படும். மாநில வாரியாக மாநில ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சார்பில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு காவலர் அணிவகுப்பு, பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெறும். அந்த வகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (RN Ravi) இன்று மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்தார். உடன் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) இருந்தார். மூவர்ணக்கொடி ஏற்றியதை தொடர்ந்து அணிவகுப்பு, சிறப்பு நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் நடைபெற்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தின் வாயிலாக இந்திய மக்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.