
ஜனவரி 30, சென்னை (Chennai): தமிழகத்தில் உள்ள அரசு பணிகளுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் நீண்ட காலமாக காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பானது தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையதால் வெளியிடப்பட்டுள்ளது. விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சு பணியாளர் உட்பட காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி (Tamilnadu Public Service Commision TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பங்கள் திருத்த கால அவகாசம்: அதன்படி, இன்று 30.01.2024 முதல் 28.02.2024 வரை குரூப் 4 தேர்வுகளுக்கு தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் ஏதேனும் இருந்தால், அதனை திருத்திக் கொள்வதற்கு மார்ச் 4 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரையில் மூன்று நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. Snake on Helmet: தலைக்கவசத்தில் பதுங்கியிருந்த குட்டி நாகம்; நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.! வைரல் வீடியோ.!
6234 பணியிடங்கள் நிரப்பப்படும்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி காலை 09:30 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12:30 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் செய்து வருகிறது. அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, இளநிலை உதவியாளருக்கு அதிகபட்சமாக 2700க்குமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தட்டச்சு பணிகளுக்கு 1800 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவ்வாறாக மொத்தம் 6234 காலி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு: https://tnpsc.gov.in அல்லது https://tnpsc.gov.in/Document/english/1_2024-Eng.pdf இங்கு அழுத்தவும்..