Rains Cloud (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 12, சென்னை (Chennai): தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாகவே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மிக்ஜாம் புயல்: அதே சமயம் கடந்த வாரம் தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Goods Train Derailed: சென்னை நோக்கி வந்த சரக்கு இரயில் தடம்புரண்டு விபத்து: தென்மாவட்ட இரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதி..!

வானிலை ஆய்வு மையம் தகவல்: இந்நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் (Weather Report) தகவல் தெரிவித்துள்ளது. இதனைப் பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.